இந்தியாவில் 6000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு...ஆலோசனையில் மத்திய அமைச்சர்!

இந்தியாவில் 6000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு...ஆலோசனையில் மத்திய அமைச்சர்!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்குப்பின் 6 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் பாதிப்பை விட 2 ஆயிரத்து 716 பேருக்கு கூடுதலாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்கள், கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டுமெனவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.