திருமண பலாத்காரம் குற்றமா? இல்லையா? - இரு நீதிபதிகளின் முரண்பட்ட கருத்தால் சர்ச்சை!

திருமணப் பலாத்காரம் குற்றமா, இல்லையா என்ற விவகாரத்தில் இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

திருமண பலாத்காரம் குற்றமா? இல்லையா? - இரு நீதிபதிகளின் முரண்பட்ட கருத்தால் சர்ச்சை!

திருமணமான கணவன் மனைவியை வன்புணர்வு செய்வது குற்றமாகுமா, ஆகாதா என்ற விவாதம் காலங்காலமாக நடந்துவருகிறது. இது தொடர்பாக வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கணவன், மனைவியைப் பாலியல் பலாத்காரம் செய்வது குற்றம் என்று அறிவிக்க கோரி பல மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. இதனை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் இரு நீதிபதிகளும்  முரண்பாட்ட தீர்ப்பை அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்துவது அதன் அளவீட்டை பொருத்து குற்றமாகவே கருதப்படும் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.