ஜே.பி.நட்டா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்... குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை!

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று பாஜக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

ஜே.பி.நட்டா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்... குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை!

இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுகிறது. இதையடுத்து,  இந்திய குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து எதிர்கட்சி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் திரிணமுல் காங்கிர, கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.