குடியரசு தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு...பாஜக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் திட்டம்!

குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 

குடியரசு தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு...பாஜக-வுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் திட்டம்!

இந்தியாவில், அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 18 ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆளும் பாஜக அரசுக்கு 49.2 சதவீத வாக்கு மதிப்பு இருப்பதால் பாஜக-வை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒருமித்த கருத்துள்ள பாஜக அல்லாத மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  

அதன்படி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்க்கே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடனும் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.