குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா.. எதிர்க்கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா.. எதிர்க்கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி அதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பாஜக சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

அதேபோல் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் மேற்கு வங்க ஆளுநராக உள்ள ஜெகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று நேற்று பாஜக ஆட்சி மன்றக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜெகதீப் தங்கரைப் போல் மார்கரெட் ஆல்வாவும் மத்திய அமைச்சராகவும்,  ஆளுநராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.