சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்தது - இந்தியா

லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்தது - இந்தியா

லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு லடாக்கில் கல்வான் மோதல் ஏற்பட இந்தியா தான் காரணம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, லடாக் எல்லையில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே கல்வான் மோதலுக்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைப்பகுதியில் சீனா தொடர்ந்து வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்தது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு நலன் முழுவதுமாக காக்கப்பட வேண்டும் என்பதற்காக சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, கிழக்கு லடாக்கின் எல்லைப்பகுதியில் மீதமுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க சீனா செயல்படும் என்பது தங்களின் எதிர்பார்ப்பு என இந்தியா தெரிவித்துள்ளது.