தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள்...!

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைபிரிவிற்கு நேற்று மட்டும் 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகள்...!

புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீதம் பேர் குழந்தைகளாக உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 167 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் நேற்று மட்டும் புதுச்சேரியில் 42 பேரும், காரைக்காலில் 8 பேர் என 50 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிளும் சேர்த்து நேற்று மட்டும், வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு 285 பேரும், அவசர சிகிச்சை பிரிவிற்கு 420 பேரும் என 705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு தற்போது பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து படிப்படியாக குறையும் எனவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.