திருப்பதி மலைப் பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தடை!!

திருப்பதி மலைப் பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தடை!!

திருப்பதி மலைப் பாதையில் திங்கள் கிழமை முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக கீழ்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வது வழக்கம். 

ஆனால், சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்கள் பாத யாத்திரை செல்ல அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு அலிபிரி நடைபாதையில் சென்று கொண்டிருந்த தினேஷ் என்பவரின் மகள் லட்சிதா மற்றும் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவனை சிறுத்தை இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, திருப்பதி மலைப் பாதையில் திங்கள் கிழமை முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாத யாத்திரை செல்ல தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க || அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் டெல்லிக்கு இடமாற்றம்...புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை!!