மாறி மாறி பதில் கூறுவதை நிறுத்துங்க... விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்க... டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

மாறி மாறி பதில் கூறுவதை நிறுத்துங்க... விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்க... டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

பதிலளிப்பதை நிறுத்தி விட்டு விதிமுறைகளுக்கு இணங்க முயற்சி செய்யுங்கள் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய டிஜிட்டல் விதிகளை சமூக வலைதள நிறுவனங்களுக்கு விதித்துள்ளது.

இதனை ஏற்க சமூல வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் காலக்கெடுவானது கடந்த 26 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் புதிய டிஜிட்டல் விதிகள் டுவிட்டரின் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இதில் சில மாற்றம் தேவை எனவும் டிவிட்டர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதுமட்டுமல்லாது  பேச்சுவார்த்தைக்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என டுவிட்டர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு மாறி மாறி பதில் கூறுவதை நிறுத்தி விட்டு விதிமுறைகளுக்கு இணங்க முயற்சி செய்யுங்கள் என காட்டமாக கூறியுள்ளது.