"மக்கள்தொகை கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயம் அவசியம்" - கார்த்தி சிதம்பரம்

"மக்கள்தொகை கணக்கெடுப்பு, எல்லை நிர்ணயம் அவசியம்" - கார்த்தி சிதம்பரம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயத்தை முறையாகச் செய்தால் மட்டுமே மகளிர் இடஒதுக்கீடு மசோதா பலனளிக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த அவர், கொள்கை அளவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக குறிப்பிட்டார்.

மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் எனவும் எல்லை நிர்ணய விவகாரத்தை மத்திய அரசு கவனமாக அணுக வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

 இதையும் படிக்க  |  மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தும் கிடைக்காத பெண்கள்..!