அக்டோபர் மாதம் அறிமுகமாகும் கோவோவேக்ஸ் தடுப்பூசி!

இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் அறிமுகமாகும் கோவோவேக்ஸ் தடுப்பூசி!

இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித ஷா மற்றும் மன்சுக் மாண்டேவியா ஆகியோரை சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிஷீல்ட் தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி அளவு தற்போது ஒரு கோடியே 30 லட்சமாக இருப்பதாகவும் உற்பத்தி அளவை அதிகரிப்பது குறித்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசி வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும், குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் கோவோவேக்ஸ் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் போது அதன் விலை நிர்ணயிக்கப்படும் எனவும் கூறினார்.