பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் தடுப்பூசி..? 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரும் பயோலாஜிகல் – இ

பயோலாஜிகல் - இ நிறுவனம் தயாரித்து வரும் கார்பெவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்-ஆக செலுத்தும் வகையில் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை தளமாக கொண்ட பயோலாஜிகல் - இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கார்பெவாக்ஸ் என்னும் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதன் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கார்பெவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்-ஆக செலுத்தும் வகையிலான 3 ஆம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பயோலாஜிகல் - இ நிறுவனம் அனுமது கோரியுள்ளது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசியின் முழு அளவை செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக ஒற்றை டோஸ் தடுப்பூசியான கார்பெவாக்ஸ் தடுப்பூசியை செலுத்தும் வகையில் 3 ஆம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளது.