மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா... குடியரசு தலைவர் ஒப்புதல்...

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா... குடியரசு தலைவர் ஒப்புதல்...

மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் பேராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. 

மேலும் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் ரத்து செய்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி கடந்த கடந்த 29 ம் தேதி குளிர் கால கூட்டம் துவங்கியது.

முதல்நாளிலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் மேற்கண்ட சட்ட மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இது குறித்த அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேளாண் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.