5 டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மருத்துவர்.. தரவுகளால் பீகாரில் சர்ச்சை

பீகாரில் மருத்துவர் ஒருவர் 5 டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

5 டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மருத்துவர்.. தரவுகளால் பீகாரில் சர்ச்சை

பீகாரில் மருத்துவர் ஒருவர் 5 டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் மட்டுமே செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முன் களபணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள் பூஸ்டர் டோஸாக 3 -வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மத்திய அரசு சமீபத்தில் அனுமதி ‘வழங்கியது.

இந்த நிலையில் பீகாரில் விபா குமாரி சிங் என்ற மருத்துவர் 5 தவணை செலுத்திக் கொண்டுள்ளதாக காட்டும் தரவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பீகார் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இதனை முற்றிலும் மறுக்கும் மருத்துவர் விபா குமாரி சிங் தான் அனுமதிக்கப்பட்ட 3 டேஸ் தடுப்பூசிகளை மட்டுமே செலுத்திக் கொண்டதாகவும், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி வேறொரு நபர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.