பாஜகவை வீழ்த்த ஒடிசா முதலமைச்சர் போடும் ரகசிய திட்டம்!!!

பாஜகவை வீழ்த்த ஒடிசா முதலமைச்சர் போடும் ரகசிய திட்டம்!!!

முதல்வர் நவீன் பட்நாயக்கின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு புதுமை பிரசாரத்தை துவங்கும் பிஜு ஜனதா தளம்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகையை அடுத்து ஒடிசாவில் அரசியல் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம்(பிஜேடி) எதிர்க்கட்சிகளை வீழ்த்த ரகசிய திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி புதுமைப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள உள்ளது. 

புதுமை பிரச்சாரம்:

பிரச்சாரத்தின் கீழ், கடின உழைப்பு, அமைதி மற்றும் அர்ப்பணிப்பு செய்தியை பரப்புவதன் மூலம், அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.   ” முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும்  கட்சியினரும் எதிர்க்கட்சி முகாம்களுடன் வாய்ப் போரில் நேரத்தை வீணாக்குவதில்லை.  மாறாக அவர்கள் வேலை மூலம் எல்லாவற்றிற்கும் பதிலளிப்பார்கள்” பிஜேடியின் பொதுச் செயலாளர்  பிரணாப் பிரகாஷ் தாஸ் கூறியுள்ளார்.

நட்டாவின் குற்றச்சாட்டு:

பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒடிசாவின் ஆளும் கட்சியை ஊழல்வாதி என்று சமீபத்தில்  கூறியிருந்தார். நட்டா, தனது சமீபத்திய மாநில பயணத்தின் போது, ​​கொலை வழக்குகளில் தொடர்புடைய அமைச்சர்களுக்கு மாநில அரசு அடைக்கலம் அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

யாருக்கும் பயப்படவில்லை:

”நாங்கள் எந்த கட்சிக்கும் பயப்பட மாட்டோம், நாங்கள் அமைதியுடன் செயல்படுகிறோம்.  புத்தாக்கம், சகிப்புத்தன்மை, அமைதியாக வேலை செய்வது மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ” என பிஜேடி பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.  பாஜக அல்லது வேறு எந்த கட்சிக்கும் நாங்கள் பயப்படவில்லை. பிஜேடி குறைவாகப் பேசுவதையும் அதிகமாகச் செய்வதையுமே நம்புகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும், ”எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வாய்ப் போரில் ஈடுபடுவதில்லை. பட்நாயக்கின் 76வது பிறந்தநாளான அக்டோபர் 16 முதல் மாநிலத்தில் 'புதியதாக' பிரச்சாரம் செய்ய கட்சி முடிவு செய்துள்ளது.” என பீகாரின் ஜாஜ்பூர் பகுதி எம்எல்ஏ தாஸ் தெரிவித்துள்ளார்.

கட்சியினரின் எதிர்வினை:

பிஜேடி துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான தேவி பிரசாத் மிஸ்ரா கூறுகையில், ”அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஒரு மாத கால பாதயாத்திரையைத் தொடங்குவதற்கு முன், எதிர்க்கட்சிகளின் ஆத்திரமூட்டும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

                                                                                                                      -நப்பசலையார்

இதையும் படிக்க:    மாற்றப்படுகிறதா பசவராஜ் பொம்மையின் அமைச்சரவை...தேர்தலுக்காக பாஜகவின் புதிய திட்டம் என்ன?!!