மீண்டும் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இறங்கிய பீட்டா... தீர்ப்பை மறு ஆய்வு கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு!!

மீண்டும் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இறங்கிய பீட்டா... தீர்ப்பை மறு ஆய்வு கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு!!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்ச நீதிமன்றத்தில் மறு  சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடக்கும் என்பது வழக்கம். அப்பொழுது இளைஞர்கள் அனைவரும், வீரர்களாக காலத்தில் இறங்கி, காளையை அடக்கி பரிசு வென்று செல்லுவார்கள். இல்லையெனில், காளை வீரர்களின் பிடியில் சிக்காமல், களத்தை கைப்பற்றி, பரிசையும் கைப்பற்றும்.

இதனிடையே, இந்த ஜல்லிக்கட்டிற்கு பீட்டா அளித்த மனுவின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, ஜல்லிக்கட்டிற்கு தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை சற்றும் ஏற்காத மக்கள், வீதிகளில் இறங்கி போராடியதன் பலனாக, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த வழிவகை செய்தது.

அதன் பின்னர், எவ்வித பிரச்னையும் இல்லாமல், ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டிற்கு தடை இல்லையென தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தற்போது, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள், காளை, எருதுகளின் உடலமைப்பு மற்றும் குணங்களுக்கும் எதிரானவை. 2107 முதல் 2022ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட கம்பலா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்து விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை பரிசீலிக்க, உச்ச நீதி மன்றம் தவறிவிட்டது. எனவே, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தையும், கம்பலா போட்டிகளை அனுமதிக்கும் கர்நாடக அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை, மாரு ஆய்வு செய்ய வேண்டும்" எனா கூறப்பட்டுள்ளது.

கம்பலா போட்டி

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க || கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!