பாதுகாப்பு துறை அமைச்சருக்கு மங்கோலியர் அளித்த சிறந்த பரிசு!!!

பாதுகாப்பு துறை அமைச்சருக்கு மங்கோலியர் அளித்த சிறந்த பரிசு!!!

மங்கோலியாவிற்கு சென்ற முதல் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறந்த பரிசை பெற்றுள்ளார்.  ஏழு வருடங்களுக்கு முன்பு பிரதம்ர் மோடியும் இதே போன்ற பரிசை மங்கோலியர்களிடமிருந்து பெற்றிருந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

மங்கோலியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றி விவாதிக்க மூன்று நாள் பயணமாக ராஜ்நாத் சிங் மங்கோலியா சென்றார்.  இரு தரப்பு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜப்பான் பயணம் சென்றுள்ளார்.

ராஜ்நாத் சிங்:

மங்கோலியாவின் தலைநகரான உலான்பதாரில் அந்நாட்டு அதிபர் குரேல்சுக்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றது.  இதற்கு முன்பாக 2018ல் குரேல்சுக் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற சந்திப்பு குறித்து நினைவுகூர்கிறேன்.  மங்கோலியாவுடனான எங்கள் பன்முக பொருளாதார கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த நாங்கள் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம்” என ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சிறந்த பரிசு:

மங்கோலியாவின் சிறப்பு தோழரிடமிருந்து சிறப்பு பரிசு நமக்கு கிடைத்துள்ளது.  அற்புதமான அழகான பரிசிற்கு நான் ‘தேஜாஸ்’ எனப் பெயரிட்டுள்ளேன்.  நன்றி அதிபர் குரேல்சுக்.  நன்றி மங்கோலியா.”  என அவர் பரிசாக பெற்ற வெள்ளைக் குதிரையின் புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி 2015ல் மங்கோலியா சென்றபோது இதைப்போல ப்ரௌன் நிற பந்தயக் குதிரையை பரிசாக பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.

கிழக்கு ஆசியா நாடுக்கு பயணம் சென்ற முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவார்.

இதையும் படிக்க: ”சூரியன் அஸ்தமிக்காத பரந்த பேரரசு, அதன் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை."