உலக பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

உலக பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

உலக பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதையும் படிக்க : ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - ஓபிஎஸ்!

அப்போது பேசிய அவர், நிச்சயமற்ற  நிதிநிலைமை, கடன் அழுத்தம், காலநிலை நிதி, உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு, குறுகிய அல்லது நீண்ட கால சவால்களுக்கான தீர்வுகளுக்கு உலகப்  பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.