வங்கிகளில் ஆட்டோ டெபிட் முறைக்கு தடை... வாடிக்கையாளர் அனுமதி கட்டாயம்... ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு...

வங்கி கணக்கு வாயிலாக, ஆட்டோ டெபிட் முறைக்கு இனி வாடிக்கையாளரின் அனுமதி கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் ஆட்டோ டெபிட் முறைக்கு தடை... வாடிக்கையாளர் அனுமதி கட்டாயம்... ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு...

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக, செல்போன், ஓ.டி.டி., உள்ளிட்ட பல சேவைகளை பெற, அதற்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது. இதேபோல் மாதாந்திர கடன் தவணை தொகையையும் ஆட்டோ டெபிட் வாயிலாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இனி வாடிக்கையாளர்களில் முன் அனுமதி இல்லாமல் ஆட்டோ டெபிட் முறை மூலம் பணம் எடுக்க முடியாது என ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. அதன்படி பணம் எடுப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அனுமதி வழங்கினால் தான் பணத்தை எடுக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகை எனில் ஒரு முறை வழங்கப்படும் கடவு எண்' வாயிலாக ஒப்புதல் பெறப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.