'ஆயுஷ்மான்' காப்பீட்டு திட்டம் ; மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

'ஆயுஷ்மான்' காப்பீட்டு திட்டம் ; மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

'ஆயுஷ்மான்' மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் செய்தியாளர் சந்திப்பில் கூறியது.

" மக்கள் இன்னும் இதிட்டத்தை பற்றி அறியாமல் இருக்கிறார்கள். இந்த திட்டம் குறித்து   மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். இந்த திட்டத்தை எப்படி பயன்படுத்துவது  குறித்து விளக்கம் காட்சி மூலம் விளக்கப்பட்டுள்ளது.

1774 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்த படுகிறது . இந்த காப்பீட்டு திட்டத்தை குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதிக அளவிலான மக்கள் இந்த காப்பீட்டு திட்டத்தை மருத்துவ செலவுகளுக்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இது இந்தியா முழுவதும் மருத்துவ காட்டமைபை மேம்படுத்துவதற்கான சிறந்த திட்டம். கொரோனா காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடப்பத்தில் தாமதம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 1264 கோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் கூடுதலாக 1977 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த காப்பீட்டு திட்டம் சில மருத்துவமனைகளில் செயல்படுத்த படுவதில்லை அந்த மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,"  என குறிப்பிட்டார்.

இதையும்  படிக்க  | ”காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” எடப்பாடி குற்றச்சாட்டு!