வெளுத்து வாங்கிய கனமழையால் முடங்கிய அசாம்.. 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சம் பேர் பாதிப்பு!!

அசாமில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் அம்மாநிலத்தின் 29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கிய கனமழையால் முடங்கிய அசாம்..  29 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சம் பேர் பாதிப்பு!!

அசாமில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

சாலைகள், ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பிரம்மாபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நதியை ஒட்டிய கிராமங்கள் முற்றிலும் மூழ்கின.

இந்நிலையில் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வெள்ளம் படிப்படியாக வடியத் துவங்கி விட்டாலும் நாகெளன், கசார், தராங் ஆகிய மாவட்டங்களில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகெளன் மாவட்டத்தில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கி கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 4 பேர் உயிரிழந்த நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. மாநிலப் பேரிடர் ஆணையத் தகவல் 80 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் 2 ஆயிரத்து 251 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 234 நிவாரண முகாம்களில் 74 ஆயிரத்து 705 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.