விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜர்... கைது நடவடிக்கை எச்சரிக்கையால் ஆஜரானார்...

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜராகியுள்ளார். 

விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜர்... கைது நடவடிக்கை எச்சரிக்கையால் ஆஜரானார்...

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ரா நேரில் ஆஜராக கோரி நேற்றைய தினம் உத்திர பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு  அஜய் மிஸ்ரா நேரில் ஆஜராக கோரி உத்தரபிரதேச போலீசார் 2-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தனர்.

இன்றும் அஜய் மிஸ்ரா ஆஜராக தவறினால் அவர் மீது பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். முககவசம் அணிவதற்கு பதிலாக பாதி முகத்தை துணியால் மறைத்தபடி ஆஜரானார்.