ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி போடும் செவிலியர்!! குவிந்து வரும் பாராட்டுக்கள்!!

ராஜஸ்தான் பகுதியில் சுகாதார பணியாளராக இருக்கும் செவிலியர் ஒருவர் கிராம மக்கள் இடத்தை தேடி ஒட்டகத்தில் பயணித்து தடுப்பூசி செலுத்தி வருவதை அனைவரும் பாரட்டி வருகின்றனர்

ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி போடும் செவிலியர்!! குவிந்து வரும் பாராட்டுக்கள்!!

கொரோனா தொற்றிற்கு எதிராக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள பணிகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி முகாம்களை அரசு ஆங்காங்கே ஏற்படுத்தி வருகிறது.தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டுமே ஒரு லட்ச மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதாகவும் தடுப்பூசி நிலையத்திற்கு வர முடியாத கிராம மக்களுக்கு அதனை கொண்டு சேர்க்கும் முயற்சியில் சுகாதார மையம் அதிகாரிகள் செய்து வருவதாக தெரிவித்தனர்.

போக்குவரத்து அதிகம் இல்லாத கிராமங்களில் போதிய வசதிகள் இன்றி தவித்து வரும் மக்களுக்கு சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வந்த செவிலியர் ஒருவர் ஒட்டகம் மூலம் கிராம மக்களிடம் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளார்.

மேலும் அந்த செவிலியர் ஒட்டகம் ஏறி தடுப்பூசி செலுத்தும் புகைபடன்ங்கள் வீடியோக்கள் போன்றவை பதிவு செய்து அதனை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இதனை கண்ட பொதுமக்கள் என அனைவரும் அவரை வெகுவாக பாரட்டி வருகின்றனர்.