பிறந்து 9 வயது வரை பெயர் சூட்டப்படாத சிறுமி...! முதலமைச்சரால் பெயரிடபட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!

பிறந்து 9 வயது வரை பெயர் சூட்டப்படாத சிறுமி...! முதலமைச்சரால் பெயரிடபட்ட நெகிழ்ச்சி சம்பவம்..!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரது ஒன்பது வயது குழந்தைக்கு தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் நேற்று பெயர் சூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

தெலுங்கானாவை சேர்ந்த சுரேஷ்- அனிதா தம்பதியருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளளது. இந்த தம்பதிகள், கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா மாநில இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், அவர்களது குழந்தைக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பெயர் சூட்ட வேண்டும் என விரும்பினர். ஆனால் அவர்களது கனவு 9 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்துள்ள நிலையில், அந்த சிறுமிக்கு பெயர் சூட்டாமல் இருந்துள்ளனர். அதனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமியை பள்ளியில், ' சிட்டி' என்று அழைத்து வந்துள்ளனர். 'சிட்டி' என்பது பெண் குழந்தைக்கான பொதுவான பெயர் ஆகும். அதோடு அந்த சிறுமியின் ஆதார் அட்டையிலும் 'சிட்டி' என்ற பெயரே உள்ளது. இருப்பினும், அவரது கிராமத்தில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர், அந்த சிறுமி  முதலமைச்சரால் பெயரிட காத்திருக்கிறார் என்பதை அறிந்ததால், 'கேசிஆர்' என்று அழைக்கின்றனர்.

இது பற்றி தகவல் தெரிந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டசபை சபாநாயகருமான மதுசூதன சாரி, அந்த தம்பதியையும், குழந்தையையும் தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்து வந்தார். பின்னர் முதலமைச்சர் கேசிஆர் அந்த தம்பதியரை வாழ்த்தியதோடு, அவர்களது 9 வயது குழந்தைக்கு ' மஹதி' என்று பெயர் சூட்டினார். முதலமைச்சர் மற்றும் அவரது மனைவி, தம்பதிகளுக்கும் அவர்களின் மகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் மஹதியின் கல்விக்கான நிதியுதவியையும் அறிவித்தனர். அதனால் அந்த தம்பதிகள் முதலமைச்சருக்கு  தெரிவித்தனர்.