ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது.. பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடரும் ஊரடங்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது.. பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடரும் ஊரடங்கு!

ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் கொடி ஏற்றுவது தொடர்பாக  இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறிய நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதனையடித்து அங்கு விரைந்து வந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவரத்தை கட்டுப்படுத்தினர். 

அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் இணையம் மற்றும் 'மொபைல் போன்' சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.  

இதனிடையே ஜோத்பூர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டார். கலவரம் தொடர்பாக இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜகவினரே இந்த கலவரத்தை தூண்டியதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்