டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு... கடந்த 2 நாட்களில் 84% ஒமிக்ரான் வகை

டெல்லியில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரோனா பாதிப்புகளில் 84 சதவீதம் ஒமிக்ரான் வகையை சேர்ந்தவை என அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

டெல்லியில் ஒமிக்ரான் சமூக பரவலாக உருவெடுத்து விட்டதாக சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பின்

தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் இன்று சுமார் 4 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும், இதனால் மாநிலத்தின் பாதிப்பு விகிதம் 6. 5 சதவீதமாக அதிகரிக்க கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது வரை தீவிர தொற்று பாதிப்புக்கு 202 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.