5ஜி ஊழல் விசாரணை வேண்டும்-ஆ.ராசா

5ஜி ஊழல் விசாரணை வேண்டும்-ஆ.ராசா

5ஜி ஏலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக எம்பி ஆ.ராசா கோரிக்கை

5ஜி சேவைகளுக்கான குறைந்த ஏல விலைகள் குறித்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா  கேள்வி எழுப்பியுள்ளார்.  5ஜி ஏலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜியுடன் ஒப்பிடும்போது, ​​5ஜி அலைக்கற்றை ரூ. 5 லட்சம் கோடிக்கு விற்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது 5ஜி அலைக்கற்றைகள் 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது . இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.  இது குறித்து விசாரணை குழு நிச்சயம் அமைக்கப்பட வேண்டும் என்று இன்று செய்தியாளர்களிடம் ஆ. ராசா பேசியுள்ளார்.

2ஜியுடன் ஒப்பிடும் போது, ​​5ஜி அலைவரிசையின் செயல்திறன் 10 முதல் 20 மடங்கு அதிகம் என்றும் ஆ. ராசா கூறியுள்ளார். 2008ல் 30 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தின் போது அப்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் அரசுக்கு ₹ 1.76 லட்சம் கோடி இழப்பு என்றார். ஆனால் தற்போது 51 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை மிகக்குறைந்த தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஆ. ராசா.

2ஜி தொடர்பான  ராய் அறிக்கை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் . அத்தகைய தணிக்கை அறிக்கையை எழுதுவதற்கு திரு. ராயின் நோக்கம் என்ன என்பதை ஆய்வு மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்றும் கூறியுள்ளார்.