இந்த ஆண்டில் இதுவரை 42 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு...!

குருகிராமில், இந்த ஆண்டில் மட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 பேர் கட்டுமான தளங்களில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 42 புலம்பெயர் தொழிலாளர்கள்  உயிரிழப்பு...!

குருகிராமில், இந்த ஆண்டில் மட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 பேர் கட்டுமான தளங்களில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் உயிரிழந்தவர்கள் : 

இந்த ஆண்டு ஜூலை 30 வரை குருகிராமில் குறைந்தது 42 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.  இதில் 20 பேர் கட்டுமானத் தளங்களில் ஏற்படும் விபத்துக்களின் போது இறந்துள்ளனர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், மீதமுள்ள 22 உயிரிழப்புகள் அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

விபத்துகள் எவ்வாறு நிகழ்கிறது..?

பல கட்டுமான தளங்களில் பணிபுரிவோர் பெரும்பாலும், புலம்பெயர் தொழிலாளர்களாகவே உள்ளனர். அப்போது ஏற்படும் விபத்துகளால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதாவது பாதாளத் தளங்களைத் தோண்டும்போது மண்ணில் குழிவுறுதல், பல மாடிக் கட்டிடங்களில் இருந்து விழுதல் மற்றும் மின்கசிவு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

அதிகாரிகளின் தகவல் : 

இது போன்ற உயிரிழப்புகள் பற்றி குருகிராம் நகர போலீசார், புறநகர்ப் பகுதிகளான பாட்ஷாபூர், மனேசர், பட்டோடி, ஃபரூக்நகர் போன்ற இடங்களிலும், தெற்கு பெரிஃபெரல் சாலை (SPR) மற்றும் துவாரகா விரைவுச்சாலையில் உள்ள பகுதிகளிலும் கட்டுமானம் தொடர்பான இறப்புகளில் பெரும்பாலானவை நிகழ்ந்துள்ளன என்றும், பெரும்பாலான வழக்குகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

கடந்த செவ்வாய் அன்று, குருகிராமில் உள்ள செக்டார்-77 இல் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் பதினாறாவது மாடியில் இருந்து விழுந்ததில் நான்கு தினசரி கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.

பவன் நிர்மான் குற்றசாட்டு :

இது குறித்து தொழிற்சங்கத் தலைவரும், பவன் நிர்மான் கம்கர் யூனியனின் முன்னாள் செயலாளருமான ராஜேந்தர் சரோஹா, பல கட்டுமானத் தளங்களில், தொழிலாளர்களுக்கு சேணம் போன்ற அடிப்படைக் கருவிகள் கூட வழங்கப்படுவதில்லை என்றும், உயரமான அடுக்குகளில் பாதுகாப்பு வலைகள் பெரும்பாலும் காணவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து குருகிராம் துணை கமிஷனர் நிஷாந்த் குமார் யாதவ், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் அடுத்த உறவினருக்கும் இழப்பீடாக ₹ 10 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்த தொழிலாளிக்கு வழங்க வேண்டிய தொகையை அவர்கள் செய்து வருவதாகவும் கூறினார்.

தடுக்கும் முறை : 

அதோடு, காவல்துறையில் பதிவாகும் அனைத்து வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொழிலாளர்களின் இறப்புக்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் உதவி ஆணையர் ப்ரீத் பால் சங்வான் தெரிவித்தார்.

மூத்த நகரத் திட்டமிடுபவரான நரேந்தர் சோலங்கி, அனைத்து கட்டுமானப் பணித் தளங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.