கடலில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 3 பேர் பலி...! மேலும் மூவரை தேடும் பணி தீவிரம்...!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள கடற்கரையில்,வெள்ளி அன்று(29.7.2022), ஒரு பொறியியல் மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 3 பேர் பலி...! மேலும் மூவரை தேடும் பணி தீவிரம்...!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 13 பேர், புடிமடக்கா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அதில் ஆறு மாணவர்கள் கரையில் நின்ற நிலையில், ஏழு பேர் வங்கக் கடலில் இறங்கியுள்ளனர். அதில் நர்சிப்பட்டினத்தைச் சேர்ந்த குடிவாடா பவன் சூர்ய குமார் (19) என்ற மாணவர் உயிரிழந்த நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி சூரிசெட்டி தேஜா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 5 மாணவர்கள் கடல் அலையில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இந்த சம்பவம் குறித்து, ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மீட்பு பணியை மேற்பார்வையிடுமாறு அமைச்சர் குடிவாடா அமர்நாத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

காணாமல் போன 5 மாணவர்களை கடலோர காவல்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று, மேலும் இரண்டு மாணவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜெஸ்வந்த் குமார் மற்றும் பென்டகோடா கணேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் மூவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.