பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்.

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள், அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகத்திற்குள் நுழைந்தனர்.

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்.

 பாகிஸ்தான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கைதான 20 இந்திய மீனவர்கள், நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். கராச்சியில் உள்ள லந்தி மாவட்ட சிறையில் இருந்து அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக, 20 மீனவர்களும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளாக லந்தி சிறையில் வாடியதாகவும், சிறையில் இருந்தபோது தங்கள் குடும்பத்திற்கு 9 ஆயிரம் வழங்கிய மோடி அரசுக்கு நன்றி எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.