அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீத தடுப்பூசி... பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீத தடுப்பூசி... பிரதமர் மோடி அறிவுறுத்தல்...

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 250-க்கும் மேல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்துவதும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று 
 ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, சுகாதார துறை செயலாளர் ராஜேஷ்பூஷன், உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் அமைச்சரவை செயலர் ராஜிவ் கவ்பா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், ஒமிக்ரானை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மாநிலங்களில் நோய் தொற்று பரவலை நோய் தடுப்பு குழு கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர் மோடி,  கோவிட் பாதிப்பு உள்ள பகுதிகளில் பரிசோதனைகளை அதிகப்படுத்தவேண்டும் என்றும், மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் உயர் மட்ட குழுவை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில், போதுமான மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் வசதிகள், படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர், அறிவுறுத்தி உள்ளார்.