”மளிகைப் பொருட்கள் துபாயில் சந்தைப்படுத்தப்படும்” - விக்கிரமராஜா

”மளிகைப் பொருட்கள் துபாயில் சந்தைப்படுத்தப்படும்” -  விக்கிரமராஜா

தமிழ்நாடு மளிகைப் பொருட்களை துபாய் நாட்டு வணிகர்கள் மூலம் சந்தைப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்ளின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான இளம் தொழில் முனைவோர் அமைப்பினர் தமிழக மளிகை  பொருட்களை துபாய் நாட்டிற்கு  ஏற்றுமதி செய்திடவும் அங்கு தேவைகளை அறிந்திடவும் அங்குள்ள அரசு, அங்குள்ள வியாபாரிகளுடன் இளம் தொழில் முனைவோர் அமைப்பினர் கலந்து ஆலோசனை செய்திட 23, 24ம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெறவுள்ளது,

இதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா தலைமையில் 162 பேர் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எம்.விகரமராஜா கூறியதாவது:-

சிங்கப்பூர், மலேசியா போன்று துபாய் நாட்டில் தமிழகத்தில் தயாராகும் பல்வேறு தரமான
 எண்ணெய், அரிசி, மளிகை பொருட்கள், தேங்காய் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்கிறோம். அதுபோல் அங்குள்ள மன்னர் உள்ளிட்ட அரசு பிரிதிநிதிகள், வியாபாரிகளுடன் தொழில் முனைவோர்  கலந்தாலோசித்து அங்கு தேவைகளை அறிந்து தமிழகத்தில் தயாராகும் பொருட்களை ஏற்றுமதி செய்திட ஒப்பந்தம் நடைபெறவுள்ளது.

இதுபோல் படித்த வணிகர்கள் தொழில் முனைவோர்களை  ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு முன்வந்து பல்வேறு உதவிகளை செய்துவரும் நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முன்னெடுத்து செயல்படுவதில் பெருமை படுகிறோம்,  வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இங்குள்ள வணிகளை ஒடுக்கும் நிலையில் தமிழக வணிகர்கள் பல்வேறு நாட்டில் மக்களின் தேவைகளை கண்டறிந்து ஏற்றுமதி  மூலம் தமிழகத்தில் உள்ள தொழில்கள் மேம்படும் என்றார்.

இதையும் படிக்க   | இணைய தள சேவை இல்லை...அனைத்து பகுதிகளிலும் உதவி மையம் அமைக்க கோாிக்கை...!