நிறுவனத்தாலோ அல்லது நிறுவனத்தின் மீதோ எந்த மோசடியும் நடக்கவில்லை: டாடா கன்சல்டண்சி நிறுவனம்!!

நிறுவனத்தாலோ அல்லது நிறுவனத்தின் மீதோ எந்த மோசடியும் நடக்கவில்லை: டாடா கன்சல்டண்சி நிறுவனம்!!

ஆட்கள் சேர்ப்பதில் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கும் டிசிஎஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது.

கடந்த 23ம் தேதி, மும்பையை தலைமையிடமாக கொண்ட டிசிஎஸ் நிறுவனம் மீது, பிரபல பத்திரிகை நிறுவனம் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தது. 

அதில், ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டிசி எஸ் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மூலம் வேளைக்கு ஆட்கள் சேர்ப்பதில் முறைகேடு செய்துள்ளதாகவும், லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகவும், டி சி எஸ் தலைமை அதிகாரி கே கிருத்திவாசன் முன் குற்றச்சாட்டை வைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக ஒரு நிறுவனம், அதற்கு தேவையான உபகரணங்கள், மனித வளங்கள் போன்றவற்றை, ஒப்பந்ததார நிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ளும். இந்நிலையியில், ஒப்பந்ததாரர்கள் மூலம் வேளைக்கு ஆட்கள் சேர்ப்பதில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதில் டி சி எஸ்- க்கு  ரூ 100 கோடி வரை பங்கு சென்றிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.  

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக, டி சி எஸ் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டிருப்பதாவது, டி சி எஸ் நிறுவனத்தின் மேல் எழுந்த குற்றச்சாட்டை ஆய்வு செய்து பார்த்ததில், நிறுவனம் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை எனவும்,  நிறுவனத்தின் மீதும் எந்த ஊழலும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், நிறுவனத்தின் உயரதிகாரிகள் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லை, ஆனால் விதி மீறலில் ஈடுபட்ட மூன்று ஒப்பந்ததார நிறுவனங்கள் மட்டும் மேற்படி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன, எனவும் டி சி எஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”மனகுமுறலை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நபர்!