" ஜி.எஸ்.டி வரி குளறுபடிகள் குறித்து ஆக.23-ல் ஆலோசனை..! " - விக்கிரம ராஜா.

" ஜி.எஸ்.டி வரி குளறுபடிகள் குறித்து ஆக.23-ல்  ஆலோசனை..!  " -  விக்கிரம ராஜா.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து, அனைத்து வணிகர் சங்கங்களுடன், ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்களாக, வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளையும் நியமித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, ஜி.எஸ்.டி வரி விதிப்பில் உள்ள குளறுபடிகள் குறித்தும். அதனால் வணிகர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்கள் குறித்தும், முதலமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை விக்கிரமராஜா வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, தங்களது கோரிக்கையை ஏற்று, அடுத்த மாதம் 23 ஆம் தேதி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து, அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்த முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க   | எதிர்கட்சிகளின் தலையெழுத்து இதுதான்... I.N.D.I.A கூட்டணியை கிழித்தெறிந்த பிரதமர் மோடி !!