யுவன் தந்த பார்ட்டியில் பாடி அசத்திய தனுஷ்..! ரவுடி பேபி பாடலை பாடி மகிழ்ந்த வீடியோ வைரல்..!

களைக்கட்டிய யுவனின் பிறந்தநாள் பார்ட்டி..!

யுவன் தந்த பார்ட்டியில் பாடி அசத்திய தனுஷ்..! ரவுடி பேபி பாடலை பாடி மகிழ்ந்த வீடியோ வைரல்..!

புகழ்பெற்ற இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. தந்தையின் இசையை தானும் பின்பற்றி இன்று இசையுலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். காதல் செய்யும் இளைஞர்களுக்கு இவரது பாடல்கள் தான் மருந்து. 16 வயதில் அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்து தனது திரைவாழ்க்கயை தொடங்கியவர். இன்றளவிலும் இசை உலகில் மிகச்சிறிய வயதில் இசையமைப்பாளராக களம் இறங்கிய ஒரே நபர் யுவன் சங்கர் ராஜா.  பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கியவர் இன்று வரையிலும் அந்த வலையை விரித்தே வைத்திருக்கிறார். 

தமிழ் திரைப்படம் மற்றும் இசைத்துறையில் ஹிப்பாப், மற்றும் ரீமெக்ஸ் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர் யுவன் சங்கர் ராஜா. ராம் படத்தின் இசைக்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில்[2] விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை அவருக்கு உண்டு. அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் அவருக்கு "யூத் ஐகான்" என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது. இரண்டு ஃபிலிம் பேர் விருதுகள்,  இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனது நட்சத்திர நண்பர்களுக்கு பிரைவேட்டாக பார்ட்டி ஒன்றை கொடுத்திருந்தார் யுவன். 

இந்தப் பார்ட்டியில், சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடகி தீ உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பார்ட்டியில் நடிகர் தனுஷும், பாடகி தீயும், மாரி-2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலை பாடி அசத்தினர். யுவனின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் #HBDYuvnShankarRaja என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.