ஜூலை 15க்கு அப்புறம் எங்க சம்பவத்தை காட்டுறோம்... கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

கமலின் விக்ரம் படத்தின் அப்டேட் கூட வந்துடுச்சு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்தும் வலிமை அப்டேட் அதிகாரப்பூர்வமாக வரவில்லையே என அஜித் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

ஜூலை 15க்கு அப்புறம் எங்க சம்பவத்தை காட்டுறோம்... கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

கமலின் விக்ரம் படத்தின் அப்டேட் கூட வந்துடுச்சு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்தும் வலிமை அப்டேட் அதிகாரப்பூர்வமாக வரவில்லையே என அஜித் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது கலை உலக குருவான கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நடிகர் கமலஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. 

ஆனால் அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரின் இறுதியில் இருந்த ' ஆரம்பிக்கலாங்களா ' என்ற வசனம் இணையத்தில் வைரலானது.  

கமல் ரசிகர்களுக்காக ‘ஆரம்பிச்சுடோம் ’ என்று இயக்குனர் லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு கமல் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட் தான் அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. 

பீஸ்ட், விக்ரம் என லேட்டஸ்ட்டாக தொடங்கி இருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரும் நிலையில், 600 நாட்களாக காத்திருக்கும் தல ரசிகர்கள் காண்டாகத்தானே செய்வார்கள்.

வரும் ஜூலை 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை கூட இன்னமும் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image

இதற்காக சமூக வலைதளத்தில் அஜித், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு இடையே கடும் சண்டையே லோகேஷ் கனகராஜின் ட்வீட்டுக்கு கீழ் நடைபெற்றுள்ளது. அதில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கலாய்த்து மீம்ஸ்களை இணையத்தில் அனல் பறக்க தெறிக்கவிட்டு கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

இப்போ கலாய்க்குற வாயெல்லாம் ஜூலை 15 தல ரசிகர்கள் செய்யப் போற சம்பவத்தை பார்த்து அலற போறாங்க.. ஜூலை 15 தலைவன் போனி கபூர் கெத்தா வருவான் என அஜித் ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.