சிம்புக்கு அடுத்து சிவா... சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தும் கோலிவுட் ஆக்டர்ஸ்

சுமோ திரைப்படம் வெறும் 35 நாளில் மொத்த வேலைகளையும் முடித்து படம் ரிலீஸாக தயாராகி விட்டதாம்.

சிம்புக்கு அடுத்து சிவா... சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தும் கோலிவுட் ஆக்டர்ஸ்

கோலிவுட் வட்டாரங்கள் ஒரு படம் எடுக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் நிலையை மாற்றி ஒரே மாதத்தில் படத்தை முடித்து கொடுத்து ஆச்சரியப்படுத்தி வருகின்றன.

காமெடி கலக்கல் நாயகனாக வலம் வருபவர் சிவா. சென்னை 600028 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வரை என்டர்டைன்மென்ட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் சுமோ என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆர் கண்ணன் இயக்கத்தில் பழைய சூப்பர் ஹிட் படமான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் நடித்து வந்தார். சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த மாதம்தான் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெறும் 35 நாளில் மொத்த வேலைகளையும் முடித்து படத்தை ரிலீசுக்கு ரெடியாக்கி விட்டார்களாம்.

இந்த செய்திதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாப்பிக். என்னதான் வேகவேகமாக படம் எடுத்தாலும் இவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. இதேபோல் கடந்த வருடத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெறும் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.