நாம ஜெயிச்சுட்டோம் மாறா!- வெற்றியைக் கொண்டாடிய சூரரைப் போற்று படக்குழு!

சூரரைப் போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும், ஐந்து தேசிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை தந்துள்ளது.

நாம ஜெயிச்சுட்டோம் மாறா!- வெற்றியைக் கொண்டாடிய சூரரைப் போற்று படக்குழு!

இந்திய படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழ் படங்களுக்குப் பல விருதுகள் வந்த நிலையில், சூரரைப் போற்று படத்திற்கு மட்டுமே ஐந்து விருதுகள் குவிந்தன. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு, கேக் வெட்டிக் கொண்டாடி, அதன் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர்.

சுதா கொங்காரா இயக்கத்தில், 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், சூரியா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ள வெற்றிப் படம் தான் சூரரைப் போற்று. டெக்கன் விமான நிறுவனத்தின் தலைவரான கேப்டன் கோபிநாத்- என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புனைப்பு கதைதான் சூரரைப் போற்று.

1 ரூபாய் வைத்து, விமானத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பட்டித் தொட்டிக்கும் கொடுக்க நினைக்கும் ஒரு ராணுவ அதிகாரியின் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில், மாறன் என்ற கதாபாத்திரத்தில் சூரியாவும், பொம்மி கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளியும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். அவர்களது சிறப்பான நடிப்பு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கொரோனா பரவல் காரணத்தினால், தியேட்டர்களில் வெளியாகாமல், ஓடிடி தளத்தில் வெளியானது இந்த படம். ஆனாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து மாபெரும் வெற்றிப் பெற்றது. 2020-21ம் ஆண்டுகளில் அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பல நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பெருமையும் இந்த படத்தையே சேரும். 

இந்த நிலையில், படம் ஆஸ்கார் விருதுகளுக்கு நாமினேட் செய்ய தேர்வு செய்யப்பட்டது. அதன் மூலம், உலகளவில் படம் பிரசித்தி ஆனது. மேலும், தெலுங்கு டப்பிங்கிலும் வெளியாகி, தற்போது இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது, இந்திய திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம், ஒரேடியாக ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த நடிகர்: சூரியா

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த படம்: சூரரைப் போற்று

சிறந்த பின்னணி இசை (BGM): ஜி வி பிரகாஷ்’

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று- ஷாலினி உஷா

இந்த ஐந்து விருதுகளையும் பெற்ற சூரரைப் போற்று படம், அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா, தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம ஜெயிச்சுட்டோம் மாறா!” என தலைப்பிட்டு, போட்டோக்களுடன் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிறந்த தயாரிப்பு நிறுவனமாக சூரியாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.