வலிமை படத்தில் பாடிய அறிவு..! தளபதிக்கும் பாடியிருக்காரா?

தளபதிக்கும், தலக்கும், பாடல் பாடி அசத்தல்..!

வலிமை படத்தில் பாடிய அறிவு..! தளபதிக்கும் பாடியிருக்காரா?

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் ஒன்று ஒன்றாக வெளிவந்து கொண்டிருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில், யுவன் சங்கராஜா இசையில் உருவாகி வரும் படம் 'வலிமை'. 

கடந்த 2019-ம் ஆண்டு பூஜையுடன் தொடங்கிய அஜித்தின் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வருடங்களில் ரசிகர்கள் வலிமை அப்டேட், வலிமை அப்டேட் என அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சாமியார்கள் என துரத்தி துரத்தி கேட்க ஆரம்பித்தனர். 

இவர்களுக்கு தீனி போடும் விதமாக வலிமை படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்’ கடந்த 11-ம் தேதி மாசாக வெளியானது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வலிமை படத்தில் வரும் ஒரு குத்து பாடலை ராப் பாடகர் அறிவு பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

’எஞ்சாயி எஞ்சாமி’ என்ற ஆல்பம் பாடல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ’அறிவு’. பாடகர் அறிவு விஜய் நடிப்பில் வெளியான ’’மாஸ்டர்’’ படத்தில் இடம் பெற்ற ’’வாத்தி ரெய்டு’’ என்ற பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.