ஈ அடிச்சான் காப்பியடிச்சா யார் தான் கிட்ட சேப்பாங்க? கழட்டிவிட்ட ஷாருக்... சீண்டாத விஜய்!! பரிதாப நிலையில் அட்லீ

இயக்குநர் அட்லீ அடுத்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் தனது அடுத்த படத்தின் இயக்குநர் பெயரை அறிவித்துள்ளார்.

ஈ அடிச்சான் காப்பியடிச்சா யார் தான் கிட்ட சேப்பாங்க? கழட்டிவிட்ட ஷாருக்... சீண்டாத விஜய்!! பரிதாப நிலையில் அட்லீ

ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய அந்த ஷாருக் கான் அட்லீ படத்தில் நடிப்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.அதற்கு பதிலாக 3 இடியட் பட இயக்குனர் ராஜ்குமார் கிராணி பெயரை மட்டுமே அறிவித்திருப்பது அட்லீ தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்டம் பிரமாண்டம் என சொல்லி தேவையில்லாமல் ரோடு, மலை, காடு என அனைத்துக்கும் கலர் சாயம் பூசியே தயாரிப்பாளர்களின் காசை கரியாக்குவதில் தனது குருவான ஷங்கரை மிஞ்சி விட்டார் அட்லீ. கடைசியாக அவர் எடுத்த பிகில் படத்திலும் சொன்னதை விட அதிக பட்ஜெட்டை எகிற விட்டு தயாரிப்பாளர்களை தெருக்கோடியில் நிறுத்தி உள்ளார். இதற்கு முன்பாக அபூர்வ சகோதரர்கள், மூன்றுமுகம், பேரரசு என மூன்று படங்களின் காட்சியை அப்படியே எடுத்து மெர்சல் என பெயர் வைத்து விஜய்யே நம்பவைத்தார். தயாரிப்பாளரையும் ஆபீஸ் கூட இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்தினார்.

ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு பிரபல படத்தில் இருந்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும் தொழிலை விடாத இந்த அட்லீ மீது ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். கோலிவுட்டில் ஈ அடிச்சான் காப்பி அடிச்சு ஹீரோவுக்கு நிகரான சம்பளம் வாங்கும் அட்லீ, அடுத்ததாக வடமாநிலத்துக்கும் பறக்க பிளான் போட்டிருந்தார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடந்த சில ஆண்டுகளாக வடநாட்டிலேயே முகாம் போட்டும் இன்னமும் அந்த ஷாருக்கானின் படத்தை இயக்கும் நேரம் அந்த அட்லீக்கு வாய்க்கவில்லை. இதனால் கடும் அப்செட்டில் உள்ளார் அட்லீ.

சரி திரும்பி சென்னைக்கே வந்து மீண்டும் அந்த விஜய்யிடம் ஐஸ் வைத்து இன்னொரு படத்தை பண்ணி விடலாம் என எண்ணினாலும், புதிய புதிய திறமைகளை தேடி நகர ஆரம்பித்து விட்டார் விஜய். அதனால், எப்படியாவது அந்த விஜய்யை கன்வின்ஸ் பண்ணி கால்ஷீட் வாங்கி விட துடித்துக் கொண்டிருக்கிறார் அட்லீ. ஆனால் விஜய் சீண்டுவதாக இல்லை.

இதற்கு நடுவே ஏற்கனவே அட்லீ படங்களில் சில முறை நடித்துள்ள அந்த நயன்தாராவை ஷாருக் படத்தில்  ஜோடி சேர்க்கப் போவதாகவும் கிசுகிசுக்களை கிளப்பி விட்டுள்ளனர்.ஆனால், ஒட்டுமொத்தத்திற்கு ஆப்பு வைத்து விட்டார் ஷாருக்.

அட்லீ கூட படம் பண்ண போறீங்களா என்கிற கேள்விகளை தவிர்த்து வந்த அந்த ஷாருக் இப்போதைக்கு தனது அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும், அந்த 3 இடியட் பட இயக்குநருடன் கை கோர்க்க உள்ளது குறித்தும் குறிப்பால் உணர்த்தி உள்ள நடிகர் கடைசி வரை காப்பி பேஸ்ட் அட்லீயை கண்டுக்கவே இல்லையாம்.