பிரண்ட்ஸ் உடன் ஊர் சுத்தும் சமந்தா.. குட்டி பையனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்

பிரண்ட்ஸ் உடன் ஊர் சுத்தும் சமந்தா.. குட்டி பையனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

சமந்தா நடிப்பில் தெலுங்கில் சாகுந்தல மெனும் படத்தில் நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினருடனும் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

சமந்தாவின் நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டி என்பவருடன் சமீபத்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அதில் சமந்தா மற்றும் ஷில்பா ரெட்டியின் மகன் இருவரும் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.