தல-தளபதி சந்திப்பால் கடுப்பான அஜித் ரசிகர்கள்...! ’ஒரேதலஅஜித்’ என டிரண்டெண்டாகும் ஹேஷ்டாக்..!

சமூக வலைதளங்களில் தல-தளபதி ரசிகர்கள் மோதல்..!

தல-தளபதி சந்திப்பால் கடுப்பான அஜித் ரசிகர்கள்...! ’ஒரேதலஅஜித்’ என டிரண்டெண்டாகும் ஹேஷ்டாக்..!

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி படம் 'பீஸ்ட்'. இதன் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் 3-ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விளம்பரப் படப்பிடிப்பிற்காக சென்னை வந்திருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. 

படப்பிடிப்புக்கு இடையே 'பீஸ்ட்' படப்பிடிப்பு அரங்குக்குள் சென்ற தோனி, விஜய்யை சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. தோனியை அவரது ரசிகர்கள் 'தல' என்று அழைப்பது வழக்கம். விஜய்யின் அடைமொழி 'தளபதி' என்பது நாம் அறிந்ததே.

இதனால் தல-தளபதி சந்திப்பு என ரசிகர்கள் இணையதளங்களில் ’ஹேஷ்டாக்’-களை உருவாக்கி வந்த நிலையில், ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள் ’ஒரேதலஅஜித்’ என்ற ஹேஷ்டாக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். திரையுலகில் ’தல’ என்றால் அஜித்குமார் தான். அஜித்குமாரும்-விஜய்யும் இணைந்து படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், தல-தளபதி சந்திப்பு என கூறுவது சரியல்ல என அஜித் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.