காமெடி, மேனரிசம் எதுவும் வொர்க்அவுட் ஆகாததால் அவுட்டான நாய் சேகர்

காமெடி, மேனரிசம் எதுவும் வொர்க்அவுட் ஆகாததால் அவுட்டான நாய் சேகர்

நாய்சேகர் ரிட்டன்ஸ்

தமிழ் சினிமாவையே கதிகலங்க வைத்த வைகைப்புயல் வடிவேலு 10 வருட வனவாசனத்திற்கு பிறகு முழுவீச்சில் களமிறங்கிய படமாக அறிவிக்கப்பட்டது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.  சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி ஆகியோர் நடிப்பில் உருவான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஒருவித ஹைப் உருவாகி வைப்-ல் இருந்தனர் ரசிகர்கள். மீண்டும் நாய்சேகர் என்றால் சும்மாவா??

தலைநகரம் நாய்சேகர்

இயக்குநர் சுந்தர்.சி காதநாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற காதாபாத்திரத்தில் தோன்றி தூள் கிளப்பியிருப்பார். ஆனால் அந்த புகழ்பெற்ற நாய் சேகரை ரிட்டன்சில் தேட வேண்டியதாகி விட்டதாம். காமெடி என்கிற பெயரில் வாய்க்கு வந்ததைப் பேசியும், மேனரிசம் என்ற பெயரில் சகிக்க முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்துவதால் தியேட்டரில் இருந்து தெறித்து ஒடுகின்றனராம் ரசிகர்கள். 

ரீ-கிரியேட் வசனங்கள்

பல திரைப்படங்களில் பேசிய நகைச்சுவை வசனங்களை ரீ-கிரியேட் என்கிற பெயரில் அவரே பேசியிருப்பதும் காண்போரை வெறுப்படைய வைத்துள்ளது. பத்து வருடங்களாக திரையில் தன் ஆதர்ச நாயகனை காண முடியவில்லை என்றாலும், மீம்ஸ் மூலம் சிரிப்பலையில் மிதந்து வந்த ரசிகர்ளை வடிவேலு இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சாரி பாஸ்

தான் என்ன செய்தாலும் அதை பார்த்து ரசிகர்கள் சிரித்து கொண்டாடுவார்கள் என வடிவேலு நினைத்திருந்தால், சாரி பாஸ்! அவங்கள்லாம் இப்போ இல்ல. நாய் பிடிக்கும் கதாபாத்திரம் என்பதற்காக நாய் சேகர் என்ற பெயர் சிறப்பாக அமைந்தபோதும், உண்மையில் நாய்படாத பாடுதான் பட்டுக் கொண்டிருக்கிறார்.

சொதப்பிய கம்பேக்

இன்றைக்கு வடிவேலுவின் முகத்தை திரையில் பார்த்து கொண்டாடியவர்கள் பலரும் சிறந்த கம்பேக் என்று தான் சொன்னார்களே தவிர, காமெடி தூள் என்ற அளவுக்கு பரவலாக கூறவில்லை. முழுநீள திரைப்படத்தில் இதுவரை தனித்தனியே சேர்த்து மொத்தம் அரை மணி நேரம் தோன்றி தூள் கிளப்பினார் வடிவேலு. ஆனால் வடிவேலுவே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து படம் முழுவதும் தோன்றினாலும் நகைச்சுவையைத்  தேடிப் பார்த்தால் அதே அரை மணி காமெடிதான்.

மேலும் படிக்க: AK நடிப்பில் மாஸாக வெளியானது..! துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்...!

ஏமார்ந்த ரசிகர்கள் 

பத்து ஆண்டுகளுக்கு பிறகு தலைவனை திரையில் பார்க்க ஆவலாய் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பழைய சோற்றை புதிய அடுப்பில் புதிய பானையில் வைத்தாலும், பழைய சோறு பழைய சோறுதான். பழைய சோற்றுக்கு மதிப்பு இருந்தாலும், அதனை வைத்து வியாபாரம் பார்க்கலாமா என்று கேட்டால் ஒன்றே ஒன்று கூறலாம். சிம்ப்ளி வேஸ்ட்! நாய் சேகர்.. (Bye Bye) பாய் சேகர்..