தனுஷுக்கு டஃப் கொடுத்த சிம்பு.. சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு சாதனை

மாங்கல்யம் என்ற பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

தனுஷுக்கு டஃப் கொடுத்த சிம்பு.. சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு சாதனை

காதல் அழிவதில்லை படத்தின்மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர் சிம்பு.  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின்மூலம் யங் சூப்பர் ஸ்டாராக மாறினார் சிம்பு.

சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன், மாஸ்டர் திரைப்படத்துடன் வெளியான இப்படம் சரியான வெற்றியை பெறவில்லை.

ஆனால் அப்படத்தில் இடப்பெற்ற மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டது.

இதனிடையே அந்த பாடல் தற்போது யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் 150 மில்லியன் பார்வைகளை பெறுவதென்பது இதுவே முதல்முறை. தனுஷின் ரவுடி பேபி பாடல் 1,220,614,646 பார்வைகளைப்பெற்று முதல் இடத்தில உள்ளது.