அனல் பறக்க போகும் தீபாவளி.. ரஜினி அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு

அனல் பறக்க போகும் தீபாவளி.. ரஜினி அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.  

எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரி கேரக்டரில் முக்கிய வில்லனாக நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், டேனியல் அன்னி போப், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மாநாடு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.