மன்னிப்பு கோரினார் கடுவா பட இயக்குநர்...

மன்னிப்பு கோரினார் கடுவா பட இயக்குநர்...

‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வசனங்கள் பேசியதற்காக இயக்குநர் ஷாஜி கைலாஸ் மன்னிப்புக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களின் சங்கமான 'பரிவார்' அளித்த புகாரின் அடிப்படையில் ஷாஜி கைலாஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும்  கடுவா படத்தின் ஒரு காட்சியில்   பெற்றோர்களின் பாவங்களின் விளைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் இதுபோன்ற  நிலைமைகளுடன் பிறக்கிறார்கள் என்று கூறுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் விதமாக படத்தில் வரும் வசனங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அதை அவர்களுடைய தவறாகக் கருதி அவர்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும்  படத்தின் இயக்குநர் கைலாஸ் மன்னிப்புக் கோரி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும் உண்மை என்னவென்றால் அந்தக் காட்சியை எழுதிய திரைக்கதை எழுத்தாளர் ஜினு. அல்லது அந்த காட்சியை இயக்கிய அவரோ, அந்த காட்சியில் நடித்த பிருத்விராஜோ, அந்த வசனத்தை படமாக்கும் போது அதன் மற்ற அம்சங்களைப் பற்றி யோசிக்காமல், வில்லனின் கொடுமையை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பது பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

நம் தவறுகளுக்கு அடுத்த தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறும் விதமாகவே வசனம் எழுதப்பட்டது எனவும் உணர்ச்சிகளைக் கடந்து உணர்ச்சிகரமான விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அவற்றை உச்சரிக்கும் ஒரு நபரின் வார்த்தைகளே இவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் பெற்றோரின் செயலுக்காக கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்ல விரும்பவில்லை எனவும்  'கடுவா'வில் இந்த உரையாடல்களால் அவர்கள் வேதனையடைந்ததை பெற்றோர்கள் எழுதிய சில பதிவுகள் மூலம் அவர் தெரிந்து கொண்டதாகவும் அவருடைய மன்னிப்பு காயத்தை மாற்றாது எனவும் இன்னும் அதிகமாக மன்னிப்பு கேட்பதாகவும் இயக்குநர் ஷாஜி கைலாஸ்  கூறினார்.

இது ஒரு பெரிய தவறு என்பதை  ஒப்புக்கொள்வதாகவும் அதை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோருவதாகவும் பிருத்விராஜ் அவருடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துகொண்டு

இது போன்ற அறிவியல் தன்மையற்ற  உணர்வற்ற உரையாடல்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக பரிவாரம் தனது புகாரில் கூறியுள்ளதாக தெரிகிறது.  மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம், 2016  பிரிவு 92 இன் படி இது  குற்றமாகும் எனவும் , இது ஊனமுற்ற நபரை  பொது பார்வையில் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் உள்ளதாகவும் வெள்ளிக்கிழமை படம் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலர் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.