த்ரில்லரில் தெறிக்கவிடும் ஜெய்..!! அதுல்யாவின் காதலுடன் வெளியான எண்ணித்துணிக டீசர்

த்ரில்லரில் தெறிக்கவிடும் ஜெய்..!! அதுல்யாவின் காதலுடன் வெளியான எண்ணித்துணிக டீசர்

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய்.

இதனை தொடர்ந்து சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருப்பினும் சுப்ரமணியபுரம் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜா ராணி, கலகலப்பு2, வலியவன், வடகறி, திருமணம் எனும் நிக்கா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக ஜெய் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு மினிமம் பட்ஜெட் ஹீரோவாக வலம் வந்த ஜெய்யின் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் தோல்வியை சந்தித்தன. தற்போது சரியான பட வாய்ப்புகள் அமையாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜெய் அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள எண்ணித் துணிக எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ஜெய்க்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.