கைலாசாவின் மீது ‘பயோ வார்' தொடங்கப்பட்டுள்ளது,..இந்து மதத்தின் கடைசி விளக்கை அழிக்க முயற்சி,.. நித்தியானந்தா குற்றச்சாட்டு.! 

கைலாசாவின் மீது ‘பயோ வார்' தொடங்கப்பட்டுள்ளது,..இந்து மதத்தின் கடைசி விளக்கை அழிக்க முயற்சி,.. நித்தியானந்தா குற்றச்சாட்டு.! 


தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா கர்நாடகாவில் பிடரி பகுதியில் ஆசிரமம் நடத்திவந்தார். இந்த ஆசிரமத்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இவர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் நிலுவையில் இருந்த நிலையில் தங்களது இரு மகள்களை நித்தியானந்தா சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாக புகார் கொடுத்தனர். 

புகார் வந்ததும் நித்தியானந்தா தலைமறைவானார். அதன் பின் தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாகவும் அங்கு வருபவர்கள் வரலாம் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான பணத்தையும் வெளியிட்டார். 

ஆனால் அவர் உருவாக்கியுள்ள கைலாசா எங்கிருக்கிறது என்றே யாருக்கும் தற்போது வரை தெரியவில்லை. இந்திய அரசும் நித்தியானந்தாவை கைது செய்ய இன்டர்போல் காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.    

இந்நிலையில் ஒரு வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா "கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே சிலர் ‘‘மர்ம விதை’’களை அனுப்பி வைத்துள்ளனர். கைலாசா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவே இது தெரிகிறது.

தன்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சி"எனக் கூறியுள்ளார்.