பொங்கலுக்கு ரிலீசாகுமா தளபதியின் பீஸ்ட்..? படக்குழுவின் திட்டம் என்ன?

தீபாவளியில் விஜய் படம் இல்லாததால் ரசிகர்கள் வருத்தம்..!

பொங்கலுக்கு ரிலீசாகுமா தளபதியின் பீஸ்ட்..? படக்குழுவின் திட்டம் என்ன?

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி அருகேயுள்ள ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடக்கவிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் யோகிபாபு, வி.டி.வி.கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுருக்கிறது. 

பீஸ்ட் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளி அன்று ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் அண்ணாத்த, படமும் அஜித்குமாரின் வலிமை படமும் வெளியாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படம் பொங்கல் அன்று வெளியிடலாம் என படக்குழு ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே தீபாவளி என்றால் நிச்சயம் விஜய்யின் படம் திரைக்கு வரும். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், திரையரங்குகள் திறக்கப்படாததாலும், தீபாவளி அன்று விஜய் படம் ஏதும் வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.