பீஸ்ட் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

பீஸ்ட் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
மாஸ்டர் படம் வெளியான பிறகு அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியது. அதன் பின்பு விஜய்யின் 65-வது திரைப்படத்தை கலாநிதி மாறனின் சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், நெல்சன் இயக்கவுள்ளதாகவும், வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. 

தொடர்ந்து படத்தின் பெயர் மற்றும்  ’பர்ஸ்ட் லுக்’ மற்றும் ’செகண்ட் லுக்’ போஸ்டர்கள் வெளியாகி எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியது. ”பீஸ்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. 14 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய படக்குழுவின் இரண்டாம் கட்ட படப்படிப்பி கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைந்துள்ளதால், படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, 1-ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. 

 
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது. ஜானி மாஸ்டரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார் நடிகர் விஜய். பிறந்தநாளில் நடைபெற்ற கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.